3 ஆண்டுகளில் 47 டெண்டர்களை எடுத்த வேலுமணியின் அண்ணன்

எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் மட்டும் கோவையில் 47 டெண்டர்களை 3 ஆண்டுகளில் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது
x
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவரின் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பல தகவல் வெளியாகி உள்ளது. 
புகாரில் சிக்கிய அனைத்து நிறுவனங்களும் ஒரே இணையதள இணைப்பை பயன்படுத்தி ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவே டெண்டர்களை கோரியது விசாரணையில் தெரியவந்தது. 2014 - 2017 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி தொடர்பான 47 டெண்டர்களை வேலுமணியின் சகோதரர் அன்பரசன் எடுத்ததும் தெரியவந்துள்ளது.  இந்த டெண்டர்கள் அனைத்துமே ஒரே செல்போன் இணைப்பு மூலமாகவும் ஒரே  இணையதள இணைப்பு மூலமாகவும் கோரியுள்ளனர். வேலுமணிக்கு மிக நெருக்கமான சந்திரசேகர், அமைச்சருடைய கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து கொண்டே டெண்டர்களை யாருக்கு விடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சரின் இல்லத்துக்கே சென்று யாருக்கு டெண்டர் விடுவது என்பது குறித்தும் ஆலோசனை ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்