தெருக்கூத்து கலைஞர் உயிரிழப்பு - கூத்து ஆடிக்கொண்டிருந்த போது உயிரிழந்த சோகம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே தெருக்கூத்து கலைஞர், தெருக்கூத்து ஆடிக்கொண்டு இருந்தபோதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெருக்கூத்து கலைஞர் உயிரிழப்பு - கூத்து ஆடிக்கொண்டிருந்த போது உயிரிழந்த சோகம்
x
மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் கமலநாதன். தெருக்கூத்து குழுவினரின் ஆசிரியரான இவர், மடிகம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில், அர்ஜூனன் வேடமிட்டு ஆடி உள்ளார். காலை 5.30 மணியளவில் ஆடிக்கொண்டு இருந்த இவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக கலைஞர்கள் அவரை, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, கமலநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தெருக்கூத்து ஆடிக் கொண்டிருந்தபோதே, தெருக்கூத்து கலைஞர் உயிரிழந்தது, மேல் அரசம்பட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்