மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் தி.நகர்

விடுமுறை நாளான இன்று சென்னையின் முக்கிய இடங்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
x
விடுமுறை நாளான இன்று சென்னையின் முக்கிய இடங்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள வணிக வளாகங்களை வரும் 9ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் கடைகள் திறக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் தி.நகர், புரசைவாக்கம், ஜாம்பஜார், ராயபுரம் மார்க்கெட் பகுதிகள் மக்கள் வருகையின்றி வெறிச்சோடின. இதற்கிடையே கடைகளை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையுடன் திறப்பது குறித்து வணிகர் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்