ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகள்

நாகை பொறையாறு பகுதியில், ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகள்
x
பொறையாரில் இருந்து காரைக்காலுக்கு புறப்பட்ட புதுச்சேரி மாநில அரசு பேருந்து, திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.  உடனடியாக பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறங்கி ஓடினர். இச்சம்பத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர். இதில், பேருந்தின் முன்பகுதி சேதமானது. முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் எலக்ட்ரிக் பழுது ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்