பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - விரைவில் முடிக்க ஒத்துழைப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க, அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க, அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது சிறையில் உள்ள அருளானந்தம், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
Next Story