மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
x
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சாந்தினி பிரபாகர். இவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதில் கேட்கப்படும் தகவல்களை கொடுக்காவிட்டால்  சிம் கார்டு செயலிழந்து விடும் என்றும் வந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன மருத்துவர் அந்த எண்ணுக்கு போன் செய்து பேசவே, 10 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இதற்காக க்விக் சப்போர்ட் என்ற செயலியை பயன்படுத்தி உள்ளார். ஆனால் சில நிமிடங்களில் அவரின் கணக்கில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது. க்விக் சப்போர்ட் என்ற செயலியின் வழியாக அவரின்  செல்போன் எண்ணை ஹேக் செய்து அந்த கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவர் சாந்தினி அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்