தொடர்ந்து 10 மணி நேரம் கராத்தே பஞ்ச் - கராத்தே மாணவர்கள் சாதனை

உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 10 மணி நேரம் பஞ்ச் செய்து திருமங்கலம் கராத்தே மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில், வேர்ல்டு சோட்டோ கான் அமைப்பைச் சேர்ந்த 75 மாணவர்கள், 10 மணி நேரத்தில் பன்னிரண்டரை லட்சம் பஞ்ச்கள் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் இச்சாதனையை அங்கீகரித்துள்ளது. இது குறித்து பேசிய பயிற்சியாளர், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனை நிகழ்த்தப் பட்டதாகவும், இப்பயிற்சியின் மூலம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்