சட்டமன்ற நூற்றாண்டு விழா - நடிகர் ரஜினிக்கு சிறப்பு அழைப்பு என தகவல்
சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தலைமைச்செயலகத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
தலைமைச்செயலகத்தில் குடியரசு தலைவர் வரும் வழி முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமர சமூக இடைவெளியோடு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, விழா நடைபெறும் இடத்தில் ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச்செயலகம் முழுவதும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். குடியரசு தலைவர் வருகையையொட்டி தலைமைச்செயலகத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story