டிராகன் பழத்தின் மருத்துவ பலன்கள்... கூந்தலின் நிறத்தை பாதுகாக்கும் பழம்...

சிவப்பு கலர்ல செதில் செதிலா பாக்க கொஞ்சம் கோரமா இருக்குற பழம்தான் டிராகன் ஃப்ரூட். ஆனா, அந்தப் பழத்துல ஒளிஞ்சிருக்குற ஆரோக்கிய நன்மைகள் வேற எதிலும் இல்லைங்கறாங்க. வாங்க அந்தப் பழத்துல என்னலாம் இருக்குனு தெரிஞ்சிக்கலாம்...
டிராகன் பழத்தின் மருத்துவ பலன்கள்... கூந்தலின் நிறத்தை பாதுகாக்கும் பழம்...
x
சீனாவின் கற்பனை விலங்கான டிராகன் பற்றி நமக்குத் தெரியும். செதில் செதிலாக, அந்த டிராகன் மிருகத்தின் உடலைப் போலவும் அதன் முட்டை போலவும் இருப்பதாlதான் இந்தப் பழத்துக்கு டிராகன் ஃப்ரூட் எனப் பெயர் வந்தது. சீனாவில் இந்த பழம் நெருப்பு டிராகன் பழம் எண்று அழைக்கப்படுகிறது. தாய்லாந்து மொழியில் லாவோ என்றும், வியட்னாமில் தாங் லாங்... அதாவது, பச்சை டிராகன் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் தறுகண்பழம், அகிப்பழம் மற்றும் விருத்திரப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. கற்றாழைச் செடியை நமக்கு நன்றாகவே தெரியும். கிட்டத்தட்ட கற்றாளை இனத்தாவரத்தில் விளையும் ஒரு பழம்தான். டிராகன் ஃப்ரூட். இந்த தாவரம் இரவு நேரத்தில் பூப்பதால் இதை இரவு ராணி என்றும் அழைப்பார்களாம். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட இந்தப் பழம், மத்திய அமெரிக்காவிற்கு அறிமுகமாகி, பின் உலகம் முழுதும் பரவியது. தற்போது ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, சீனா, வியட்நாம், இலங்கை , வங்கதேசம் எனப் பல இடங்களில் டிராகன் ஃப்ரூட் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் சில இடங்களில் டிராகன் ஃப்ரூட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நமது தமிழ் நாட்டிலும் ஒரு சிலர் இந்த டிராகன் பழத்தை விளைவிக்கின்றனர்.

புளிப்பும், இனிப்புச் சுவையும் நிறைந்த டிராகன் பழம் மூன்று நிறங்களில் நமக்கு கிடைக்கிறது. இளம் சிவப்பு, அடர் சிவப்பு  மற்றும் மஞ்சள். இதன் சவை சற்று தர்பூசணியின் சுவையைப் போன்றே இருக்கும். சர்க்கரையின் அளவைக் குறைப்பது வெகு சில பழங்கள்தான். அதில் ஒன்று டிராகன் பழம். டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொண்டால் இதயம் ஆரோக்கியமாகும். இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தக்குழாய்களின் இறுக்கத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இவ்விரண்டு முக்கிய விஷயங்களும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன. டிராகன் பழத்தில் லைகோபீன் எனும் என்சைம், வைட்டமின் சி, மற்றும் கரோட்டின் அதுகம் காணப்படுகின்றன. உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்க இவை உதவுகின்றன.

இந்தப் பழம் ஒரு சுவையான நொறுக்குத்தீனிதான். ஆனால், மிகக் குறைந்த அளவே கலோரி இதில் உள்ளது. இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் உண்டு. எனவே இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆக, உடல் இளைக்க விரும்புகிறவர்களின் நம்பர் ஒன் சாய்ஸ்... டிராகன் ஃப்ரூட்! ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டு வலி வயோதிகர்களை வீட்டிலேயே முடக்கிப் போடக் கூடியது. ஆனால், டிராகன் ஃப்ரூட்டை அதிகம் எடுத்துக் கொண்டால் நம்மை மூட்டு வலி தாக்கும் காலத்தை முடிந்த வரை தள்ளிப் போடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டிராகன் பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவையும் சீராக வைக்கிறது. டிராகன் பழத்தில் சில குறிப்பிடத்தக்க புரதங்கள், என்சைம்கள் உள்ளன; இவை உடல் செல்களை புதுப்பிக்கவும், செல்களை பழுது பார்க்கவும் உதவும்.

பிறவி கண் அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்க  டிராகன் பழம் உதவுகிறது என்கிறது ஓர் ஆய்வு. பசியே எடுக்கவில்லையென்றால் அது உடலில் சில நோய்கள் ஏற்பட்டிருப்பதை குறிக்கும். காய்ச்சல், ரத்தசோகை போன்ற நோய்கள் உடலில் உண்டானால், அவை பசி உணர்வை அழித்துவிடும். ஆனால், அப்படிப்பட்டவர்கள் டிராகன் பழம் சாப்பிட்டால் விரைவில் உடல் குறைபாடு நீங்கி பசி எடுக்கத் தொடங்கும். டிராகன் பழம் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருந்தாலும் நம் முகத்தை பளிச்சென ஆக்கும் நற்குணம் இதற்கு உண்டு. இந்தப் பழத்தை துண்டுகளாக முகத்தில் ஒற்றி வைக்கலாம். அல்லது அரைத்து ஃபேஸ் பேக்காக பூசலாம். வெயிலால் முகம் கறுத்துப் போவதையும் பருக்கள் தோன்றுவதையும் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இந்த டிராகன் ஃப்ரூட் ஃபேஸ் பேக் தடுக்கிறது. இளமையான, மென்மையான சருமத்தை மீட்டுத் தருகிறது. இந்த காலத்தில் ட்ரெண்ட், ஸ்டைல் என்ற பெயரில் பலரும் முடியை கலர் செய்து கொள்கிறார்கள். பிறகு இயற்கையான கூந்தல் நிறத்தை இழந்துவிட்டோமே என வருந்துவார்கள். டிராகன் பழத்தை அரைத்து அந்த விழுதை கூந்தலில் பூசினால் இயற்கையான கூந்தல் நிறத்தை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள் பயன்படுத்திப் பார்த்தவர்கள்.

Next Story

மேலும் செய்திகள்