மேட்டூர் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு - நாளை முதல் டிச.15 வரை திறக்க உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்குக்கரை கால்வாய்களில் நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
x
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கிழக்கு மற்றும் மேற்குக்கரை கால்வாய்களில் இருந்து நாளை முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் காய்வாய்களிலும் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்