ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் - ஆன்லைனில் நடத்த திட்டம்

முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது.
x
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனரை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதையடுத்து கல்லூரிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்