+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.
x
பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார். 
பிளஸ்2 தேர்வு  எழுத விண்ணப்பித்த மாற்றுத் திறன் உடைய தனித்தேர்வாளர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)ன் அடிப்படையில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனுடைய தனித்தேர்வாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித் துறை வெளியிடும் என்றும், எனினும் விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுதிறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்