4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்
x
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. பொன்னாரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணனும், நாமக்கல்லை சேர்ந்த சிந்தாமணியும் கல்லூரியில் காதலித்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். திருமணமான ஓராண்டில் புரிதல் இல்லாததால் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையுடன் நான்கு ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்த சிந்தாமணி கடந்த மாதம் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ சென்றுள்ளார். அப்பொழுது மணிவண்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்தது தெரிய வந்தது. எனினும், கணவருடன் ஒரே வீட்டில் இருந்த சிந்தாமணி நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சிந்தாமணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கணவரை கைது செய்யக் கோரியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்