தலை துண்டித்து இளைஞர் கொலை - முன்விரோதமா? தொழில்போட்டியா? -விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலை துண்டித்து இளைஞர் கொலை - முன்விரோதமா? தொழில்போட்டியா? -விசாரணை
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பொய்யாழி என்பவரின் 21 வயது மகனான பெயிண்டர் மதன்குமார், சமையல் வேலைக்கும் சென்று வந்துள்ளார். டீ கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், மந்தித்தோப்பு பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனம் அருகே தலை துண்டிக்கப்பட்டு கொலையாகி கிடந்துள்ளார். தகவலின் பேரில் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு, உறவினரின் போராட்டத்துக்கு பின், உடற்கூராய்வு செய்யப்பட்டது. சம்பவ இடத்தை எஸ்.பி., டி.எஸ்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு மது மற்றும் குளிர்பான பாட்டில்கள், இருசக்கர வாகனம் இருந்தன. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்