ஊரடங்கு ஆக.9 வரை நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
x
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி காலை 6  மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

பொது மக்கள் கூடக்கூடிய இடங்கள், கடைகளில் கை சுத்திகரிப்பான், உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். 

மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும்,  வரும்முன் காத்தலே விவேகம்; இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்