சி.பி.எஸ்.இ. 12 - ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், 99 புள்ளி 13 சதவிகித மாணவர்களும், 99 புள்ளி 67 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில்
எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியானது. மதிப்பெண்களை அறிந்து கொள்ள மாணவர்கள் cbse.nic.in என்ற சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்து 'ரோல் நம்பர் ஃபைண்டர்' என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அங்கு 'தொடரவும்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.10 அல்லது 12 ஆம் வகுப்பு என்பதை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, தாய் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். தகவலை தேடுங்கள் என்பதை கிளிக் செய்தால் மாணவர்களுக்கு 10 அல்லது 12 ஆம் வகுப்புக்கான ரோல் நம்பர் கிடைக்கப்பெறும். அந்த ரோல் நம்பரை பயன்படுத்தி www.cbseresults.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், 99 புள்ளி 13 சதவிகித மாணவர்களும், 99 புள்ளி 67 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Next Story
