ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
x
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப்படுகிறது. மேலும், சுற்றுலா தலங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்