லாரிகளில் கடத்தப்படும் குட்கா மூட்டைகள் - வாகன சோதனையில் குட்கா பறிமுதல்

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் லாரிகளில் எடுத்து வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரிகளில் கடத்தப்படும் குட்கா மூட்டைகள் - வாகன சோதனையில் குட்கா பறிமுதல்
x
சீலநாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரு லாரிகளில் சோதனையிட்டனர். அதில் 248 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, லாரி ஒன்றில் சிலர் மூட்டைகளை ஏற்றுவதை பார்த்துள்ளனர். பொலீசாரின் வருகையை பார்த்து 4 பேர் தப்பி ஓடிய நிலையில் லாரியில் மாட்டுத் தீவன மூட்டை நடுவே 50க்கும் மேற்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கியது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்