ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - கடன் பிரச்சனையால் தற்கொலையா..?

திருவாரூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - கடன் பிரச்சனையால் தற்கொலையா..?
x
நெடுஞ்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிப்பெற்றவர் முருகானந்தம். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெடுஞ்சேரி ஆற்றங்கரை ஓரம் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் முருகானந்தம் இறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தேர்தலுக்காக முருகானந்தத்திற்கு கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விக்ரதியில் இருந்த அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்