"சட்டம் ஒழுங்கு இருந்தாலே தொழில் சிறக்கும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பு காவல்துறையிடமே உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
வண்டலூர் அருகேயுள்ள ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தில் 52 வாரம் பயிற்சியை நிறைவு செய்த 86 பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அணிவகுப்பில் ஈடுபட்டு பதக்கம் மற்றும் வாளினை பெற்றுக் கொண்டனர். தேசிய கொடியுடனான வெள்ளை நிற ஜீப்பில் வலம் வந்து காவல்துறையினரின் மரியாதையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். 

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலே தொழில் சிறந்து , வேலைவாய்ப்பு பெருகும் என்று தெரிவித்தார். அமெரிக்கா , இங்கிலாந்து போல் காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்றும் மக்களின் காவலர்களாக  காவல்துறையினர் இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்