"இல்லாத கண்மாயில் தடுப்பணை" - உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்ட 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்த‌தாக தொடரப்பட்ட வழக்கில், உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
இல்லாத கண்மாயில் தடுப்பணை - உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்ட 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்த‌தாக தொடரப்பட்ட வழக்கில், உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் வீரையன் கண்மாயில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டதாக அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால், பணங்குடி கிராமத்தில் வீரையன் கண்மாய் என்ற பெயரில் எந்த கண்மாயும் இல்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, பொதுமக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்தனர். மேலும், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தடுப்பணையை நேரடியாக ஆய்வு செய்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்