பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும் - மத்திய உள்துறைக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும் - மத்திய உள்துறைக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
x
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்  அனுப்பியுள்ளது.

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்து நடைபெற்ற விசாரணை அறிக்கையை, சிபிசிஐடி போலீசார் தமிழக அரசிடம் கடந்த 21 ஆம் தேதி ஒப்படைத்தனர்.

இந்த அறிக்கையில், முன்னாள் சிறப்பு டிஜிபி பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு பணி தேர்வாணையத்தின் உத்தரவை பெற்று மாநில அரசு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது சட்ட நடைமுறை. 

இதனால் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் மத்திய அரசு பணி தேர்வாணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

மத்திய அரசு அளிக்கக்கூடிய ஒப்புதலைப் பெற்று, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி பாலியல் புகார் அளிக்க வரும் போது தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட, 3 காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்