இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது
x
வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சிறுவர்கள், இளைஞர்கள் போதை ஊசிகளை கையில் செலுத்திக் கொள்ளும் வீடியோக்களும், அதிகளவிலான குற்றச்சம்பவங்கள் நடப்பதும் சமீப காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பின்னணியில் போதை மருந்து புழக்கமும், மதுவுமே காரணம் என்றும்  சொல்லப்பட்டன. 

குறிப்பாக வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவும், போதை சாக்லேட்டுகளும் அதிகம் புழங்குவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொருக்குப் பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான போதை ஊசிகளை சிறுவர்களுக்கு செலுத்துவது தெரியவந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இந்த கும்பலுக்கு போதை மாத்திரை எங்கிருந்து கிடைக்கிறது என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது. வடமாநிலத்தை சேர்ந்த ரித்தீஸ் ராஜன் என்பவர் இந்த கும்பலின் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்ததை அறிந்த போலீசார் அவரை பிடிக்க பொறி வைத்தனர். 

இந்த சூழலில் தான் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரித்தீஸ் ராஜன் சென்னை வருவது தெரியவந்தது. தகுந்த முன்னேற்பாடுகளோடு இருந்த போலீசார் போதை கும்பல் தலைவனை அதிரடியாக கைது செய்தனர்.

அப்போது அவரை பிடித்து விசாரித்த போது தான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போதை மாத்திரைகளை சேல்ஸ் மேன்கள் மற்றும் மருந்து கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. 

தூக்கம், மயக்கத்திற்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகளை பார்மசிகளில் இருந்து வாங்குவதும், இதற்காக சில மருந்து கடைகளை இந்த கும்பல் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததும் உறுதியானது. 

குறைந்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி அதை பல மடங்கு விலை வைத்து விற்றதும் தெரியவந்தது. இதற்காக சென்னையில் பல சேல்ஸ் மேன்கள் செயல்பட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார் ரித்தீஸ் ராஜன். 

போதை மருந்துகளை அவர்கள் மூலமாக பெற்று அதை சிறு சிறு வியாபாரிகளிடம் பிரித்து கொடுத்துவிட்டு பின்னர் உத்தரபிரதேசம் சென்று விடுவாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் இங்கு வந்து வசூல் பணத்தை வாங்கிக் கொள்வதும் அவரின் வழக்கமாக இருந்துள்ளது. அவர் சொன்ன தகவலின் படி சில மருந்துக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள், கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. போதை கும்பல் தலைவன் சொன்ன தகவலின்  பேரில் சென்னையில் உள்ள மருந்து கடைகள், சேல்ஸ் மேன்களும் இப்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்