நூதன முறையில் பண மோசடி - சைபர் க்ரைம் போலீசார் கார்ட்டூன் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு
சைபர் க்ரைம் போலீசார் கார்ட்டூன் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சைபர் க்ரைம் போலீசார் கார்ட்டூன் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மர்ம நபர்கள், வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி, அவர்களது கணக்கிலிருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர். குறிப்பாக படிக்காதவர்கள் மற்றும் முதியோரைக் குறி வைத்து இந்த மோசடி நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சைபர் க்ரைம் போலீசார் கார்ட்டூன் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், அடித்துக் கேட்டாலும் ஓடிபி எண்களைக் கொடுக்க வேண்டாம் போன்ற நகைச்சுவை வாக்கியங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Next Story

