ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் - தாயை இழந்து பரிதவிக்கும் 2 குழந்தைகள்

திருவள்ளூர் அருகே அரசு மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் - தாயை இழந்து பரிதவிக்கும் 2 குழந்தைகள்
x
திருவள்ளூர் அருகே அரசு மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரதீப். இவரின் மனைவி வனிதா. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 2வது முறையாக கருவுற்ற வனிதா, கடந்த 20ஆம் தேதி பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவருக்கு அங்கே செவிலியர் ஒருவர் ஊசி ஒன்றை செலுத்தியதாக தெரிகிறது. ஊசி போட்டுக் கொண்ட சில நிமிடங்களிலேயே வனிதாவுக்கு அலர்ஜி ஏற்பட்டதோடு வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகரிக்கவே, 
உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்