குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் கிடந்தது. இதனை நடைபயிற்சிக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட வேண்டிய அரசு ஆவணங்கள் குப்பையில் கிடந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த கோப்புகள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்கு போனது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்