கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி முயற்சி - பெண் ஒருவரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் ஒருவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்ததை இப்போது பார்க்கலாம்....
கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி முயற்சி - பெண் ஒருவரை கைது செய்த  போலீசார்
x
தஞ்சை மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் ஒருவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்ததை இப்போது பார்க்கலாம்.... 

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என கூறிக் கொண்ட ஒருவர் அந்த மாவட்டத்தில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களை சில நாட்களுக்கு முன்பாக செல்போனில் அழைத்துள்ளார். 

அரசின் திட்டங்களுக்காக பணம் தேவைப்படுவதாகவும், அதற்காக 50 ஆயிரம் பணம் அனுப்புமாறு கூறியதோடு வங்கி கணக்கையும் கொடுத்திருக்கிறார் அந்த செல்போன் நபர். 

அவரின் அணுகுமுறை சந்தேகத்தை ஏற்படுத்தவே, கடை உரிமையாளர்கள் இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது தான் அதன் விபரீதத்தை புரிந்து கொண்ட ஆட்சியர், உடனடியாக அந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். 

அப்போது அந்த மோசடி கும்பல் அழைத்த செல்போன் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில் அந்த வங்கிக் கணக்கு கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ரெஜினா என்ற பெண்ணுடையது என தெரியவந்தது. 

இதையடுத்து அந்த வங்கிக் கணக்கை முடக்கிய சைபர் க்ரைம் போலீசார், ரெஜினாவை பிடித்து விசாரித்தனர். கோவையில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்த ரெஜினாவை, மோசடி கும்பல், பகடைக் காயாக பயன்படுத்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், மோசடி கும்பல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த சந்தானம் மற்றும் அவரின் மனைவி ரீட்டா பபியா என்பது அம்பலத்திற்கு வந்தது. இதனால் உஷாரான போலீசார், திருவள்ளூர் வந்து ரீட்டா பபியாவை கைது செய்தனர்.

அவர் மீது ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கணவர் சந்தானத்தை தேடி வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

Next Story

மேலும் செய்திகள்