வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.
வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம்  திறந்து வைப்பு
x
வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் Torrent Gas நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டி கேட் நிலையம் மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 CNG நிலையங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 5,000 கோடி ரூபாய்  முதலீட்டில் இந்த திட்டத்தின் மூலம் மற்றும் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம்  33 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள CNG  வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்



Next Story

மேலும் செய்திகள்