கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன்  கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.சங்கரன் கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தபடுவதாகவும் ஆக்கிரமிப்பாளர், எனக்கு அரசியல்,ஆள் பலம்" உள்ளது என மிரட்டுவதாகவும், தேனியை சேர்ந்த முருகேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெறவும், ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்