"தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க வேண்டும்" - முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 'தகைசால் தமிழர்' விருது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் தொழில்துறை, தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழு ஆண்டுதோறும் தகுதியான நபரை தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு 10 லட்சம் ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்றும், பணமும், சான்றிதழும் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படும் என்றும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்