பழைய இரும்பு கடையில் தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்

நெல்லை மாவட்டம் முக்கூடலில் பூராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பழைய இரும்பு கடையில் தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்
x
நெல்லை மாவட்டம் முக்கூடலில் பூராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடைக்கு அருகில் உள்ள நிலத்தில் 
கருவேலமரங்களை வெட்டி சுத்தம் செய்ய தீ வைத்துள்ளனர். அந்த தீ 
கடைக்குள் மளமளவென பரவியதால்  பழைய  பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை  எரிந்து கருகின.  இது குறித்து பூராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்