பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு - முதல் நாளே சுமார் 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளே சுமார் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
x
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளே சுமார் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் முதல் நாளில் விண்ணப்ப பதிவு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்தில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கலந்தாய்வுக்கு முன், தனி இட ஒதுக்கீடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்