இ.சி.ஆரில் கார் விபத்து : ஒரு பெண் உயிரிழப்பு - நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தானதில், அவரது தோழி உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
x
சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தானதில், அவரது தோழி உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 4 பேர், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணித்துள்ளார். அதிகாலையில், மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில், நிலை தடுமாறிய கார், சாலை நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அதில், தெலுங்கானா மாநிலம் ஜதராபாத் நகரை சேர்ந்த வள்ளிசெட்டி பவனி என்ற 28 வயது இளம்பெண், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில், மென் பொறியாளராக பணியாற்றிய அவர், 4 நாட்கள் முன் சென்னை வந்தது தெரியவந்தது. மேலும், காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். காரின் மேற்கூரையில் நின்றவாறு, நடனமாடியபடி வாகனத்தை ஓட்டியதால், விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்