பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கோவை காரமடை பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து திடீரென்று அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி வரையிலான நிலவரப்படி, அணைக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்ந்தது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
