"இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது" நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இயற்கையை அழிக்கக் கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
x
"இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது" நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இயற்கையை அழிக்கக் கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பழைய மாமல்லபுரத்தில் 2வது சாலை அமைக்கும் திட்டத்திற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்  படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், அதை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மாநில அரசு நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள்,நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில், மேல் நிலை சாலை அமைக்கலாம் எனவும்,இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்