தமிழகத்தில் 2021க்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா..? தடுப்பூசி பங்கீட்டில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
x
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுபாடு காணமாக நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்துதல் பணி, 5 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் வந்ததும் மீண்டும் தொடங்கியிருக்கிறது. 

தமிழகத்திற்கு 12-ம் தேதி வரையில் ஒரு கோடியே 67 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், ஒரு கோடியே 66 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிகமான தடுப்பூசி சென்றிருக்கும் நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என மத்திய அரசை  மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

உற்பத்தியில் 90 சதவீத டோஸ்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். பொதுமக்களும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழகத்தின் தேவை 11 கோடியே 12 லட்சம் டோஸ்களாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்த திட்டம் சாத்தியமாகுமா என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்