சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு - காடுகளுக்குள் மாணவர்களின் ஆபத்தான பயணம்

ஆன்லைன் வகுப்பிற்காக யானைகள், சிறுத்தை நடமாட்டமுள்ள காட்டுபகுதியில் மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு தொலை தொடர்பு வசதியே ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நீலகிரி மாவட்டம் கூடலூர் மலைசார்ந்த பகுதியாகும் இந்த பகுதியில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக அடந்த வனத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் கிடைப்பதால் ஆபத்தான பயணத்தை நோக்கி மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மாணவர்களின் படிப்பதற்காக உரிய வசதியை ஏற்படுத்திதரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்