தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில் - 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது
பதிவு : ஜூலை 13, 2021, 10:58 AM
கன்னியாகுமரி மாவட்டம், எஸ்.டி மங்காடு பகுதியில் தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத போதகரான லால் ஷைன் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு  இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தேவாலயத்தின் போர்வையில் அங்கு பாலியல் தொழில் செய்யப்படுவது தெரியவந்தது. அங்கு இருந்த தாய், மகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் லால் ஷைன் சிங் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லால் ஷைன் சிங், ஷிபின் ஆகியோர் அந்த பெண்களோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், 19 வயது பெண்ணை அவரது தாயாரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

காப்பகத்தில் இருந்து தப்பிச்சென்ற மாணவிகள் பத்திரமாக மீட்பு - காப்பக நிர்வாகிகளிடம் போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிச்சென்ற 3 மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

16 views

பிற செய்திகள்

சூரியசக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரி - வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு உரிய ஆவணங்களின்றி சூரிய சக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரிக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

0 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

15 views

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 views

தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

42 views

"மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

10 views

"4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.