சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
x
21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி, 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், 21 பேருக்கு முதல் தவணையாக 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்