வருசநாட்டில் தேங்கிய 30 லட்சம் தேங்காய் - விவசாயிகள் கவலை

தேங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள வருசநாடு விவசாயிகள், நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நல்ல மழை காரணமாக ஆந்திர, கர்நாடகா, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தேங்காய் விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தேங்காய்கள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தேங்காய், தற்போது 10 ரூபாய்க்கும் கீழே குறைந்துவிட்டது. இதனால் வருசநாடு பகுதிகளில் விளைந்த சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. 
தோட்ட பராமரிப்பு, தென்னை மரம் ஏறுபவர்களின் கூலிக்கு கூட போதுமானதாக இல்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் தேங்காய்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்