7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வருகின்ற 7ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், 
8ம் தேதி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ஜூலை 9ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதால், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரியில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மலை ஏற்றத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னையில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்