இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
இன்றும் நாளையும், பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல், வருகின்ற 8ம் தேதி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கனமழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில்  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகின்ற 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்