முன்விரோதம் காரணமாக நடந்த பயங்கரம் - தந்தையின் உடலுக்கு 3 வயது மகன் இறுதி சடங்கு
கரூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பேச்சுவார்த்தைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் படுகொலை செய்யப்பட்டார். வாகனத்திற்கு வழிவிட மறுத்தது தொடர்பான தகராறில் இந்த கொடூர கொலை நடந்தது. இந்த சம்பவத்தில் தர்மதுரை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி பிரபுவின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரபுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் செய்யப்பட்டன. தன் தந்தையின் உடலுக்கு 3 வயதான சிறுவன் இறுதி சடங்குககளை செய்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Next Story