பக்தர்கள் தரிசனத்திற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திறப்பு

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
x
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகாலையிலேயே கோயிலில் திரண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோயில் வளாகத்தில் உட்கார தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய் , பழம் , கொண்டு வர தடை விதித்துள்ள கோயில் நிர்வாகம், அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்