குழந்தை தத்தெடுப்பு - வழிகாட்டு நெறிமுறைகள்

மதுரையில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காப்பக விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
x
மதுரையில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காப்பக விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மதுரையில் இயங்கிய காப்பகத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகம். அதே காப்பகத்தில் வசித்த கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரது 2 வயது மகள் காணவில்லை என புகார். விசாரணையில் குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டது தெரியவர, இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இது தொடர்பாக காப்பக உரிமையாளர் சிவக்குமார், உதவியாளர் மாதர்ஷாவும், குழந்தைகளை வாங்கிய தம்பதிகள், இடைத்தரகர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும் நிலையில், முறையாக குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி என்பது குறித்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.அதன்படி, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் CARA என அழைக்கப்படும் மத்திய தத்தெடுத்தல் ஆதார ஆணையத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தத்தெடுக்கும் தம்பதி 10 ஆண்டுகள் கணவன், மனைவியாக இருக்க வேண்டும்.திருமண பதிவு, வயது சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.குடும்ப சூழல், வருமானம், குழந்தை வளர்க்க தேவை உள்ளதா, குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.கொரோனாவால் பெற்றோர் இறந்தவிட்ட காரணத்தால் குழந்தையை விற்பனை செய்ய முடியாது எனவும், மீறினால் குழந்தைகள் கடத்தல் சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.குழந்தை விற்பனை குறித்து 1098, 100, 1091 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தும் புகார் அளிக்காமல் இருந்தாலும், தண்டனைக்குரியது என எச்சரிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்