"குடும்ப அட்டை வழங்க வேண்டும்" - மாற்றத்தை எதிர்நோக்கும் இருளர் மக்கள்

உத்திரமேரூர் அருகே குடும்ப அட்டை இல்லாததால், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல், இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் அல்லல்படுகின்றனர்.
x
உத்திரமேரூர் அருகே குடும்ப அட்டை இல்லாததால், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல், இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் அல்லல்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள பட்டாங்குளம், வினோபாநகர், நாஞ்சிபுரம், அம்மையப்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில், இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், ஏரி குளம் போன்ற ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசித்து வரும் இந்த மக்கள், ஓலைக் கீற்றுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை கொண்டே வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் ஒருசிலர் மட்டுமே, 90 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்து, பாழடைந்த நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்