ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து குறைவு - வினாடிக்கு 3,000 கனஅடி நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
x
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை குறைந்ததன் காரணமாக, கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு மூவாயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீர் நிலையான அளவில் இல்லாமல் தினமும் ஏற்ற இறக்கத்துடன் வந்து கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்