ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க போலி ஆவணம் தயாரித்த தந்தை, மகன் சிறையில் அடைப்பு

ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க போலி ஆவணம் தயாரித்த தந்தை, மகன் சிறையில் அடைப்பு
ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க  போலி ஆவணம் தயாரித்த தந்தை, மகன் சிறையில் அடைப்பு
x
ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க  போலி ஆவணம் தயாரித்த தந்தை, மகன் சிறையில் அடைப்பு

பெரம்பூரில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்து அபகரிக்க முயன்ற தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது உறவினர்கள், பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியில், 4 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் வீடு மற்றும் காலிமனை வாங்கி, அதனை ரங்கநாதனுக்கு பொது அதிகார பத்திரம் மூலம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன்களாகிய பன்னீர்செல்வம் மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவர், போலி பத்திரம் தயாரித்து, 2018ல் ரங்கநாதனிடம் இருந்து வீட்டை அபகரிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ரங்கநாதனுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால், செல்வநாயகமும், பன்னீர்செல்வமும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், ஜாமீனில் வெளிவந்த இருவரும் ரங்கநாதனுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, செம்பியம் போலீசாரிடம் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில், செல்வநாயகம் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்