அரசுக்கு சொந்தமான 36.23 ஏக்கர் நிலம்.. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு

பூந்தமல்லி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான 36.23 ஏக்கர் நிலம்.. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு
x
அரசுக்கு சொந்தமான 36.23 ஏக்கர் நிலம்.. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு 

பூந்தமல்லி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே, பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ளது பாப்பான் சத்திரம். இங்குள்ள 36 ஏக்கர் 23 செண்ட் நிலத்தை, தனியார் நபர்கள் சிலர் பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், நிலத்தை பயன்படுத்தி வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட இடத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவித்து பலகை வைத்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டனர். தற்போது மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும், இங்கு அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் கொண்டுவரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்