37 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை

தமிழகத்தில், சென்னையைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. மாவட்டம் வாரியாக பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்...
x
நீலகிரி, கடலூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பெட்ரோல் விலை பட்டியலில் தமிழக அளவில் முதல் 5 இடங்களில் உள்ளன. பெட்ரோல் விலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் 6வது இடத்திலும், திருப்பத்தூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 

அதிகபட்ச பெட்ரோல் விலையில் மயிலாடுதுறை மாவட்டம் 11வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், ராணிப்பேட்டை, தர்மபுரி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. வேலூர் மாவட்டம் 16வது இடத்திலும், திண்டுக்கல் பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் விலை உயர்வு பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

பெட்ரோல் விலை உயர்வில் தேனி மாவட்டம் 21வது இடத்திலும், அதற்கு அடுத்த இடங்களில் நாமக்கல், தென்காசி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் 26வது இடத்திலும், அதற்கு அடுத்த இடங்களில் மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

திருச்சியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் 30 பைசாவாகவும், டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் உள்ளது. இதே போல் திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. 

மற்ற மாவட்டங்களை காட்டிலும் செங்கல்பட்டு, கரூர், சென்னையில் பெட்ரோல் விலை சற்று குறைவாக உள்ளது. சென்னையில் கச்சா எண்ணை சுத்தீகரிப்பு ஆலை அமைந்துள்ளதால், இங்கு விலை குறைவாக உள்ளது. இதே போல் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரூருக்கு குழாய் மூலம் பெட்ரோல், டீசல் அனுப்படுவதால், சென்னைக்கு அடுத்தபடி கரூரில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்